வட கொரியாவின் அரச தலைவர் கிம் ஜாங் அன் கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்ட நிலையில், வட கொரியாவில் அசாதாரண அறிகுறிகள் எதுவும் வரவில்லை என்று தென் கொரிய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய விவகாரத்தை கவனிக்கும் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவுத்துறையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சி.என்.என் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக தென் கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கிம் ஜாங் அன் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், கவலைக்கிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய அதிபர் மாளிகையோ, வட கொரியாவில் இருந்து எந்த அசாதாரண அறிகுறிகளும் வரவில்லை என்று கூறியுள்ளது.