Select Page

City Union Bank



Share this page

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இந்திய இராணுவத்தை அனுப்பிவைப்பதற்கு இந்தியா திட்டமிடுவதாக பிரஸ் டிரஸ்ட் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவுக்கு கடந்த மாதம் இந்தியா 14 பேர் கொண்ட இந்திய இராணுவ குழுவை அனுப்பியுள்ளது.

இதேபோன்று குவைத்திற்கும் 15 பேர் கொண்ட இந்திய இராணுவ குழுவொன்றை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

பிராந்தியத்தில் உள்ள நேசநாடுகள் கொரோனா வைரஸினை எதிர்த்து போராடுவதற்கு உதவும் இந்தியாவின் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை பங்களாதேஸ் பூட்டான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிற்கு இந்திய இராணுவத்தின் தனித்தனி குழுக்களை அனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

சார்க் நாடுகள் கொரோனாவை வைரஸினை எதிர்த்து போராடுவதற்கான பொதுவான கட்டமைப்பின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this page