Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: எம்.பி., பதவியை இழந்து, ஐந்து மாதங்களாகியும், டில்லியில் அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்யாத, 50 பேரை, வலுக்கட்டாயமாக வெளியேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 

லோக்சபாவின் பதவிக் காலம் முடிந்த ஒரு மாதத்துக்குள், அரசு ஒதுக்கும் பங்களாக்களை, முன்னாள் எம்.பி.,க்கள் காலி செய்ய வேண்டும். கடந்த லோக்சபாவின் பதவிக் காலம், மே, 25ல் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், முன்னாள் எம்.பி.,க்கள் பலரும், அரசு ஒதுக்கிய பங்களாக்களை காலி செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில், சி.ஆர்.படேல் தலைமையிலான, லோக்சபா குடியிருப்பு ஒதுக்கீட்டுக் குழு, கடந்த மாதம், 19ல், எச்சரிக்கை விடுத்துஇருந்தது. ‘காலி செய்யாத, 200க்கும் மேற்பட்ட, முன்னாள் எம்.பி.,க்கள் ஒரு வாரத்துக்குள் காலி செய்யாவிட்டால், குடிநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது.

 

அதன்பிறகு, பல்வேறு முன்னாள் எம்.பி.,க்கள், அரசு பங்களாக்களை காலி செய்தனர். ஆனால், 50க்கும் மேற்பட்டோர் காலி செய்யாமல், தொடர்ந்து அங்கேயே வசிக்கின்றனர்.அடுத்த சில தினங்களில் இவர்கள் காலி செய்யாவிட்டால், பொது இடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை அப்புறப்படுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது


Share this page