Select Page

City Union Bank



Share this page

மும்பை: மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில், சிவசேனா சார்பில், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிட உள்ளார்.

 

மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 288 தொகுதிகள் உள்ள மஹாராஷ்டிராவில், அக்.,21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிவசேனாவும், பா.ஜ.,வும் ஈடுபட்டுள்ளன. தொகுதிகள் பங்கீடு முடிவாகாத நிலையில், சிவசேனா கட்சிக்கு செல்வாக்கு அதிகமுள்ள, அக்கட்சி கேட்டு பெற்ற சில தொகுதிகளுக்கு, வேட்பாளர் பட்டியலை சிவசேனா நேற்று(செப்.,29) வெளியிட்டது. சாவந்த்வாதி தொகுதியில் தீபக் கேசர்கர், கோலாப்பூர் தொகுதியில் ராகேஷ் சிரேஸ்கர் போட்டியிட உள்ளனர்.

 

இந்நிலையில் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே, மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலில் சிவசேனா சார்பில் களமிறக்கப்பட உள்ளார். இதனை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும், அவரது மகன் உத்தவ் தாக்கரே தேர்தலில் போட்டியிடாமல், கட்சி பொறுப்புகளை மட்டுமே வகித்து வந்த நிலையில், முதன் முறையாக அக்குடும்பத்திலிருந்து ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட உள்ளார்.


Share this page