Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: காற்று மாசடைவதை தவிர்க்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த, கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இதற்கான வரைவு கொள்கை, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

 

 

காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தற்போதுள்ள வாகனங்களை விட, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்கள், 25 மடங்கு வரை, அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் புகையை வெளிப்படுத்துகின்றன.

இது குறித்து, மத்தியசாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது நாட்டில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட, இரண்டு கோடிக்கு மேற்பட்ட வாகனங்கள் இயங்குகின்றன. இவை, தற்போதுள்ள வாகனங்களைவிட, 25 மடங்கு அதிக அளவு புகையை வெளியிடுகின்றன. அதனால், 2005க்கு முந்தைய வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 

வாகனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தாலும், அவை வெளிப்படுத்தும் புகை, சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால், இது போன்ற வாகனங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனியார் வாகனங்களுக்கான, மறு பதிவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதேபோல், போக்குவரத்து வாகனங்களுக்கான, தகுதிச் சான்று கட்டணம் உயர்த்தப்படும். இதைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும், தகுதிச் சான்று பெற வேண்டும்.

பழைய வாகனங்களுக்கு மாற்றாக, புதிய வாகனங்கள் வாங்க வைக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். அதேபோல், பழைய வாகனங்களை ஒப்படைப்போருக்கு, புதிய வாகனம் வாங்குவதில் சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான வரைவு கொள்கை அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என, எதிர்பர்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Share this page