Select Page

City Union Bank



Share this page

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று (செப்., 30) சென்னை வருகிறார்.

 

 

சென்னை, ஐ.ஐ.டி., துவக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வைர விழாவும், 56வது பட்டமளிப்பு விழாவும், இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக, டில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில், இன்று காலை 9:00 மணிக்கு, பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் வர உள்ளார்.

 

அங்கிருந்து ஹெலிகாப்டரில், சென்னை, ஐ.ஐ.டி., வளாகம் வருகிறார். பின், ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா வளாகத்திற்கு சென்று, ‘இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான்’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 11:00 மணிக்கு, சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில் நடக்கும், 56வது பட்டமளிப்பு விழாவில், மோடி பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

விழா முடிந்ததும் பகல் 1:00 மணிக்கு, அவர், ஐ.ஐ.டி.,யில் இருந்து புறப்பட்டு, ஹெலிகாப்டரில், சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டில்லி செல்கிறார். பட்டமளிப்பு விழாவில், சிறப்புரையாற்ற உள்ள பிரதமர் மோடி, தன் உரையில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்து, ஐ.ஐ.டி., முன்னாள், இந்நாள் மாணவர்களிடம், ‘நமோ செயலி’ வழியாக, கருத்து கேட்டுள்ளார். விழாவில், பிரதமர் மோடியுடன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


Share this page