Select Page

City Union Bank



Share this page

சென்னை,:-விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர், புகழேந்தியை, விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சி தலைவர், ஸ்டாலின், நேற்று அறிவித்தார்.காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க.,வும், நாங்குநேரி தொகுதியில், காங்கிரசும் போட்டிஇடுகின்றன.
தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த, 13 பேரில், 12 பேர் மட்டுமே, நேற்று சென்னை அறிவாலயத்திற்கு அழைக்கப்பட்டனர்.அவர்களிடம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அதன் முடிவில், மாவட்ட பொருளாளர், புகழேந்தியை, இடைத்தேர்தல் வேட்பாளராக, ஸ்டாலின் தேர்வு செய்தார்.

இது குறித்து, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘அடுத்த மாதம், 21ல் நடைபெற இருக்கும், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற, தி.மு.க., வேட்பாளராக, நா.புகழேந்தி போட்டியிடுவார்’ என, கூறியுள்ளார்.விழுப்புரம் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, நிருபர்களிடம் கூறுகையில், ”விக்கிரவாண்டி தொகுதியில், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர், தீவிர பிரசாரம் செய்வர். தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெறும்,” என்றார். பெயர்: நா.புகழேந்திபிறந்த தேதி: 20.08.1954வயது: 65கல்வி: எஸ்.எஸ்.எல்.சி.,ஜாதி: வன்னியர்சொந்த ஊர்: அத்தியூர் திருவாதி, விழுப்புரம் தாலுகாமனைவி: கிருஷ்ணம்மாள்மகன்: செல்வகுமார்மகள்கள் : செல்வி, சாந்தி, சுமதி தொழில்: விவசாயம்


Share this page