Select Page

City Union Bank



Share this page

சென்னை, தமிழக சபாநாயகர் தனபால், இன்று உகாண்டா நாட்டிற்கு செல்கிறார்.உகாண்டா நாட்டின் தலைநகர், கம்பாலாவில், இன்று முதல், 27ம் தேதி வரை, ‘காமன்வெல்த் பார்லிமென்ட்’ மாநாடு நடக்கிறது. தமிழக கிளையின் பிரதிநிதியாக, சபாநாயகர் தனபால் பங்கேற்கிறார். இதற்காக, சபாநாயகர் இன்று காலை, 3:30 மணிக்கு, கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், தோகா சென்று, அங்கிருந்து கம்பாலா நகருக்கு செல்ல உள்ளார்.அவருடன், சட்டசபை செயலர், சீனிவாசனும் செல்கிறார். இருவரும், மாநாடு முடிந்து, அக்., 11 அதிகாலை, 2:10 மணிக்கு, சென்னை திரும்புகின்றனர்.


Share this page