Select Page

City Union Bank



Share this page

ஹூஸ்டன்: ‘பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு நாடு எது என்பதை உலகம் அறிந்துள்ளது; பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டிய நேரம் இது’ என பிரதமர் மோடி, பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்.

 

 

‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில், மோடியின் உரைக்குப்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அவர் பேசி முடித்த பின், டிரம்ப் உரைக்கு நன்றி தெரிவித்த மோடி, மீண்டும் தன் பேச்சை துவங்கினார்.

அவர் பேசியதாவது: பிரமாண்டத்துக்கு பெயர் பெற்றது டெக்சாஸ் மாகாணம். நாம் இங்கு புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறோம். இது இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம். அதிபர் டிரம்புக்கு உலக அரங்கில் அறிமுகம் தேவை இல்லை. இந்திய – அமெரிக்க உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர் டிரம்ப். இந்நிகழ்ச்சியில் நான் 130 கோடி மக்களின் பிரதிநிதியாகவே கலந்து கொண்டுள்ளேன். பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்திருப்பது, இந்தியாவை உன்னதமாக்கி உள்ளது.

 

புதிய இந்தியா:

அனைவருக்கும் வளர்ச்சி என்பதே எங்களது இலக்கு. புதிய இந்தியாவே எனது லட்சியம். புதிய இந்தியாவை படைக்க இரவு பகலாக உழைத்து வருகிறோம். இந்திய தேர்தல் ஒரு ஜனநாயக திருவிழா. இந்தியாவில் அதிக அளவில் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

 


Share this page