Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி:டில்லியில், கணவருக்காக காரில் காத்திருந்த பெண் ஆடிட்டர், சுட்டுக் கொல்லப்பட்டார்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

கிழக்கு டில்லியை சேர்ந்த பெண் ஆடிட்டர், உஷா சஹ்னி, 59. இவர், நேற்று முன்தினம், கணவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள, அவரை காரில் அழைத்துச் சென்றார்.பட்பர்கஞ்ச் பகுதியில் வந்த போது, அங்கிருந்த கோவிலுக்கு செல்ல, கணவர் விரும்பினார். இதையடுத்து, காரை உஷா நிறுத்தினார். கோவிலுக்கு கணவர் மட்டும் சென்றார். காரில், உஷா காத்திருந்தார். அப்போது, மோட்டார் பைக்கில் வந்த சிலர், கண் இமைக்கும் நேரத்தில், காரில் இருந்த உஷாவை நோக்கி, சரமாரியாக சுட்டனர். பின், தப்பிச் சென்றனர்.துப்பாக்கி சத்தம் கேட்டு கோவிலிருந்து வந்த கணவர், காரில் ரத்த வெள்ளத்தில் உஷா கிடப்பதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு, உஷாவை கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ‘முன்விரோதம் காரணமாக, இந்த கொலை நடந்துள்ளது’ என, தெரிவித்தனர்.ரவுடிகள் ரகளைடில்லி அக் ஷர்தம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, ரவுடி கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. ரவுடிகள் பற்றி தகவல் தெரிவித்த போலீசார், அவர்கள் வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே, துப்பாக்கி சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில், காரில் ரவுடி கும்பல் தப்பி சென்றது. போலீசார் விரட்டி சென்றும், காரை பிடிக்க முடியவில்லை.


Share this page