Select Page

City Union Bank



Share this page

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த உதித் சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிகழ்வு குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதே போல் தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு வட மாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வழங்கும் நீட் கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைப்போகும் தமிழக அரசையும் அம்பலப்படுத்துவோம். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில் அரசு பணிகளில் வடமாநிலத்தவர்களை அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவதையும், ஸ்டாலின் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு: ரயில்வே பணியிடத் தேர்வுகள், மின்சார வாரியத் தேர்வுகள், ‘சிவில் நீதிபதிகள்’ தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி, தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

M.K.Stalin

@mkstalin

ரயில்வே பணியிடத் தேர்வுகள் – மின்சார வாரியத் தேர்வுகள் – ‘சிவில் நீதிபதிகள்’ தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி – தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

View image on TwitterView image on Twitter
490 people are talking about this

வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

M.K.Stalin

@mkstalin

ரயில்வே பணியிடத் தேர்வுகள் – மின்சார வாரியத் தேர்வுகள் – ‘சிவில் நீதிபதிகள்’ தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி – தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

View image on TwitterView image on Twitter

M.K.Stalin

@mkstalin

வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்!


Share this page