Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : செப்.,24 ம் தேதி ஐ.நா.,வில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளதாகவும், இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

 

 

டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், செப்.,21 ம் தேதி பிற்பகலில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 27 ம் தேதி காலை தான் அவர் நாடு திரும்ப உள்ளார். டெக்சாசின் ஹூஸ்டன் நகருக்கும், நியூயார்க்கிற்கும் அவர் செல்ல உள்ளார். செப்.,22 ம் தேதி இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் அதிபர் டிரம்ப்பும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

செப்.,24 ம் தேதி பிற்பகல் ஐ.நா.,வில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘Leadership matters: Relevance of Gandhi in contemporary times’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இணைந்து கொரிய குடியரசு அதிபர், சிங்கப்பூர் பிரதமர், நியூசி., பிரதமர், வங்கதேச பிரதமர், ஜமைக்கா பிரதமர், ஐ.நா., பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியில் நியூயார்க்கில் ஐ.நா., தலைமையகத்தின் மேல்தளத்தில் காந்தி சோலார் பார்க் நிறுவுவது உள்ளிட்ட 3 திட்டங்கள் துவக்கப்பட உள்ளது. பில்கேட்சின் ‘ Global Goalkeeper’ அமைப்பின் சார்பில் பிரதமர் மோடிக்கு, தூய்மை இந்தியா திட்டத்திற்காக விருது வழங்கப்பட உள்ளது.
2014 ம் ஆண்டு ஐ.நா., உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு செப்.,27 ம் தேதியன்று பிரதமர் மோடி முதல் முறையாக ஐ.நா., பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களை மோடி சந்திக்க உள்ளார் என்றார்.


Share this page