Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: பிரதமர் மோடியின் புகைப்பட ஸ்டாண்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டு உள்ளது.

 

 

பிரதமர் மோடியின் பயணங்கள், விழாக்கள் மற்றும் சந்திப்புகளின் போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் கடந்த 14ம் தேதி முதல்’ஆன்லைன்’வாயிலாக ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை www.pmmementos.gov.in என்ற இணையத்தளத்தில் ஏலத்தில் வாங்கலாம். இந்த விற்பனை அடுத்த மாதம் 3ம் தேதி முடிவு பெறுகிறது. இதில் திரட்டப்படும் தொகை கங்கை நதி துாய்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

 

பிரதமரின் பரிசுப் பொருட்களை ஏலம் எடுக்க பலரும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரதமர் மோடியின் புகைப்பட’ஸ்டான்டி’ன் அடிப்படை விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு கோடி ரூபாய்க்கு ஓருவர் ஏலம் கேட்டு உள்ளார். இதேபோல் பிரதமர் மோடிக்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வெள்ளிகுடத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட தேங்காயை வைத்து பரிசாக வழங்கினர். இதன் அடிப்படை விலை 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

 

கன்றுக்கு பசு பால் கொடுக்கும் உலோக சிலையின் அடிப்படை விலை 1500 ரூபாயாக நிர்ணியக்கப்பட்டுள்ளது. இதை 51 லட்ச ரூபாய்க்கு ஒருவர் ஏலம் கேட்டுள்ளார்.


Share this page