Select Page

City Union Bank



Share this page

வில்நியூவே: சுவிஸ் நாட்டில் வில்நியூ நகரில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், காந்தி சிலையை திறந்து வைத்தார்.

 

 

அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுவிஸ் சென்றார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அந்நாட்டின் வில்நியூவே நகரில் ஜெனிவா ஏரிக்கரையில் நிறுவப்பட்ட காந்தி சிலையை திறந்து வைத்து பேசினார். அப்பகுதிக்கு காந்தி சதுக்கம் என்று பெயரிடப்பட்டதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

புகழாரம்

அந்த விழாவில் அவர் பேசியதாவது:
‘காந்தி மனிதகுல ஒற்றுமையில் நம்பிக்கை வைத்திருந்தார். அவர் எல்லா பண்பாடுகளையும் மக்களையும் அரவணைத்து சென்றார். இந்து மதப் பாடல்களையும் மேற்கத்திய பாடல்களையும் சமமாக பாவித்து ரசித்து கேட்டவர் காந்தி. 1931 ல் இந்த நகருக்கு காந்தி வந்திருந்தார். நோபல் பரிசு வென்ற பிரெஞ்ச் நாவல் ஆசிரியர் ரோமைன் ரோலண்ட் அழைப்பின் பேரில் வில்நியூவிற்கு காந்தி வந்தார்’.

 

‘இயற்கையை நேசித்த காந்திக்கு அஞ்சலி செலுத்துவது நம் கடமை. இயற்கயை நேசிப்பவர்களுக்கும், காலைநிலை மாற்றத்ததை சமாளிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காந்தியின் கொள்கை மிகவும் ஊக்கமளிக்கும்’. இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.


Share this page