Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: நீதிபதிகள் பணியிடமாற்றம் தகுந்த காரணங்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்படுகிறது என உச்சநீதிமன்ற கொலிஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) தெரிவித்துள்ளது.

 

 

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹீல்ரமானி மேகாலயா ஐகேர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சென்னையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இப்பிரச்னைக்கு கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது.

 

சிறப்பான நிர்வாகம்

‛நீதிபதிகள் இடமாற்றம் சட்டநெறிமுறைகள் படியும், மேம்பட்ட நீதி நிர்வாகத்திற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பரிந்துரையும் கொலிஜியத்தின் முழுமையான முடிவின் படி ஒரு மனதாக எடுக்கப்படுகிறது’.

 

விளக்கம் அளிக்கப்படும்

‛நீதித்துறை நலன் கருதி பணியிட மாற்ற காரணங்களை வெளியிட முடியாது. அவசியம் ஏற்பட்டால் பணியிட மாற்றம் குறித்த விளக்கத்தை வெளியிட தயக்கம் இல்லை’ இவ்வாறு கொலிஜியம் தெரிவித்துள்ளது.


Share this page