Select Page

City Union Bank



Share this page

சென்னை : முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர். இந்த பயணத்தின் போது பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டு நாட்களுக்கு முன் நாடு திரும்பிய முதல்வர் பழனிசாமி, விரைவில் இஸ்ரேல் செல்ல உள்ளார்.

 

இதற்கிடையில் முதல்வரை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டுமான தொழில் குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சிங்கப்பூர் செல்லும் ஓபிஎஸ், அங்கிருந்து சீனா அல்லது இந்தோனேசியாவிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Share this page