Select Page

City Union Bank



Share this page

JAIPUR: 

ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கான்வாய் இருசக்கர வாகனத்தில் மோதியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் z ப்ளஸ் பாதுகாப்பு பெற்றவர் ஆவார். இந்த சம்பவம் நடந்தபோது மோகன் பகவத் ராஜஸ்தானின் திஜாரா பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பி வந்துள்ளார்.

அப்போது அவரது பாதுகாப்புக்காக எட்டு முதல் பத்து கார்கள் பின்தொடர்ந்து வந்துள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து மந்தாவார் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, மோகன் பகவத்தின் பாதுகாப்பு வந்த கார்களில் ஒரு கார் இரு சக்கர வாகனத்தின் மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அவனை அழைத்த வந்த அவனது தாத்தா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துக்கு காரணமான பாதுகாப்பு வாகனம் பறிமுதல் செய்யப்பட உள்ளது. மேலும், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Share this page