Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 46 ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய நல் ஆசிரியர் விருதை வழங்கினார்.
ஆசிரியர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டில்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று, நடந்த விழாவில், 46 பேருக்கும், தேசிய நல்லாசிரியர் விருதை, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார்

 

அவர் பேசுகையில், ”நம் முன்னோர்கள் மிக சிறந்த அறிஞர்களாக இருந்தனர். பல அறிவியல் கண்டுபிடிப்புகளை எளிதாக கூறியுள்ளனர். குருவான ஆசிரியர்களை, தெய்வாமாக மதிக்கும் கலாசாரத்தை சேர்ந்தவர்கள் நாம். அன்னை, தந்தை, குரு, தெய்வம் என கூறி வழிபடுவது, நமது பண்பு,” என்றார்.


Share this page