Select Page

City Union Bank



Share this page

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: நாடுமுழுவதும் வரும் 2021-22 ஆம் ஆண்டிற்குள் புதிதாக 75 மருத்துவக்கல்லூரிகள் துவங்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்படும்.

 

மேலும் சர்க்கரை ஏற்றுமதிக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து வரும் 2019-20-ம் நிதியாண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படும். சர்க்கரை ஏற்றுமதி மானியத்திற்காக ரூ. 6,268 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஏற்றுமதி மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்ள கட்டமைப்பை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதயைடுத்து நியூயார்க் நகரில் வரும் செப்.,23ம் தேதி நடைபெறும் ஐ.நா.,வின் பருவகால மாநட்டில் பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்
அந்நிய முதலீடுகளுக்கு ஒப்புதல்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியது, டிஜிட்டங்கள் ஊடகங்களில் 26 சதவீத நேரடி அந்நிய முதலீடுகளுக்கும், நிலக்கரி சுரங்கம் அதன் உள்கட்டமைப்புகளில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீடுகளுக்கும் , தானியங்கி ஒப்பந்த திட்டத்திற்கு 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டிற்கும், மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வா று அவர் கூறினார்.


Share this page