Select Page

City Union Bank



Share this page

லண்டன்: வரும் அக். 14-ம் தேதி வரை பார்லி.யை முடக்கிவைக்க ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்து உள்ளார்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் ஒப்புதலை பெற பார்லி.யில் பலமுறை நடந்த ஓட்டெடுப்பில் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்தது. . இதையடுத்து தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன்படி, தன் பிரதமர் பதவியை, கடந்த மாதம் (ஜூன்) அவர் ராஜினாமா செய்தார்.

 

தற்போது புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். இந்நிலையில் பிரெக்சிட் விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் அரசுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதால். அதுவரை பிரிட்டன் பார்லிமென்டை முடக்கி வைக்க ஒப்புதல் அளிக்க கோரி ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வரும் அக். 14-ம் தேதி வரை பார்லி.யை முடக்கிவைக்க ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Share this page