Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் தங்கள் உறவினர்களை, அமைச்சகங்களில் பணியில் நியமிக்கக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

 

 

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: மத்திய அமைச்சர்கள் காலை 9.30 மணிக்குள் தங்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும். எனது உத்தரவுக்கு காத்திருக்காமல், தங்கள் பணிகளை தொடங்க வேண்டும். அமைச்சகங்களில் உள்ள உயரதிகாரிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தாமல், அனைத்து நிலையிலான அதிகாரிகளுடனும் ஆலோசிக்க வேண்டும். துடிப்பான அதிகாரிகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.

 

கட்டுப்பாடு:

அமைச்சகங்களில் ஆலோசனை அளிக்கும் பணிகளில், உறவினர்களையோ அல்லது தமக்கு வேண்டப்பட்டவர்களையோ மத்திய அமைச்சர்கள் நியமிக்கக்கூடாது. திறமையானவர்களை மட்டுமே அப்பதவியில் நிர்ணயிக்க வேண்டும். ஊடகங்களில் பேட்டி அளிக்கும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் திட்டங்கள், உண்மைகளை மட்டுமே பேச வேண்டும். தேவையில்லாத கருத்துகளை கூறக்கூடாது. பொதுமக்களிடமும் அதை கடைபிடிக்க வேண்டும்.

 

மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் இடையே சிறப்பான ஒத்துழைப்பு இருப்பது அவசியம். இதனால் நிர்வாக திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Share this page