புதுடில்லி: இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இந்திய தூதரகங்களில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியது. இந்நிலையில், இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில், சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடந்த நிகழ்ச்சியில், தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா தேசிய கொடியை ஏற்றி வைத்து, ஜனாதிபதியின் உரையை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டிற்கான இந்திய தூதர் ருச்சி ஞானஷியாம், இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் விஜய் எம். குவாத்ரா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Indian Ambassador Mr. Vinay M. Kwatra hoisted the tricolour flag at the Embassy of India,Paris. Indian Community in large numbers joined hands to celebrate 73rd Year of Independence. @IndAmbFrance
ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், இந்திய தூதர் கான்ட்னே தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

High Commissioner Dr. A.M Gondane unfurling the National Flag on the 73rd Independence Day at India House, Canberra in the presence of large number of Indian diaspora.
சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும், இந்திய தூதரக அலுவலகங்களில், தூதர்கள் தேசிய கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

