Select Page

City Union Bank



Share this page

சென்னை : ”ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததால் அந்த மாநிலத்தில் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு முடிந்துள்ளது. அவரின் இரண்டு ஆண்டு கால பணியை ஆவணப்படுத்தும் விதமாக ‘கற்றல் கற்பித்தல் மற்றும் தலைமையேற்றல்’ என்ற நுால் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.அமித்ஷா வெளியிட வெங்கையா நாயுடு பெற்றுக் கொண்டார். அமித்ஷா பேசியதாவது:தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்; தமிழை கற்க முயன்றேன்; பல்வேறு காரணங்களால் முடியவில்லை. சென்னையில்ஒரு நாள் நிச்சயம்தமிழில் பேசுவேன்.

இந்த நுால் வெளியீட்டு விழாவிற்கு மத்திய அமைச்சராகவோ, எம்.பி.யாகவோ வரவில்லை; வெங்கையா நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன்.’கற்றல் கற்பித்தல் தலைமையேற்றல்’ என்ற தலைப்பு சம்பவங்களின்தொகுப்பு இல்லை. தன் வாழ்நாளில் ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும்; நாம் கவனித்து கேட்டு அறிந்து எப்படி தலைமையேற்று நடக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டப்பிரிவு 370ஐ சமீபத்தில் மத்தியஅரசு ரத்து செய்தது. வெங்கையா நாயுடு மாணவராக இருந்த போது இந்த சட்டப்பிரிவை எதிர்த்து போராடியிருக்கிறார்.காஷ்மீர் விவகாரம் பற்றி கம்யூனிஸ்ட் பேராசிரியர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, ‘ஒரு கண்ணை மற்றொரு கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் ஒரு கண்ணில் வலி இருந்தால் அதை மற்றொரு கண் உணரும். அது போல காஷ்மீர் பிரச்னையை உணர வேண்டும்’ என பதில் அளித்தார்.

துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவராக வெங்கையா நாயாடு இருக்கிறார். சட்டப் பிரிவு 370ஐ நீக்க வேண்டும் என்று போராடிய ஒருவர் அதை நீக்குவதற்கான மசோதா வரும் போது ராஜ்யசபா தலைவராக இருந்துள்ளார் என்பது காலத்தின் முடிவு.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பயங்கரவாதம் ஒழிவதோடு அப்பகுதி முன்னேற்றம் அடையும்.இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதா அல்லது வேண்டாமா என்ற குழப்பமே என் மனதில் உருவாகவில்லை.

இந்தச் சட்டப்பிரிவால் நாட்டிற்கோ ஜம்மு – காஷ்மீருக்கோ எந்த நன்மையும் இல்லை என நம்பினேன். அதனால் அதை விரைவாக ரத்து செய்ய முடிவு செய்தேன்.நான் குஜராத் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஆனது முதல் மத்திய உள்துறை அமைச்சராகும் வரை சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதில் மாற்று கருத்து இருந்ததில்லை. ராஜ்யசபாவில் மசோதாவை எடுத்து வரும் போது ஒருவித தயக்கம், அச்சம் இருந்தது.

வேண்டுமென்றே முதலில் ராஜ்சபாவில் நிறைவேற்றுவோம்; பின் லோக்சபாவிற்கு எடுத்து செல்வோம் என முடிவு செய்தோம்.ஆனால் ராஜ்யசபாவில் விவாதம் முதல் ஓட்டெடுப்பு வரை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமை காரணமாக அனைத்து கட்சி ஆதரவுடன் மாசோதா நிறைவேறியது. வெங்கையா நாயுடு ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சமமாக நடத்துகிறார். துணை ஜனாதிபதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அவரது நுால் வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்


Share this page