Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : காஷ்மீரை பிரிக்கும் அரசின் நடவடிக்கையால் ஏராளமான நன்மைகள் உள்ளன என காங்., மூத்த தலைவர் கரண் சிங் தெரிவித்துள்ளார்.

 

 

1947 ம் ஆண்டு காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் கரண் சிங்கின் தந்தை மகாராஜா ஹரி சிங். இவர் தான் காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னர். ஹரி சிங்கின் மகனும் மாநிலமாக மாற்றப்பட்ட காஷ்மீரின் முதல் கவர்னருமான கரண் சிங். காங்., கட்சியை சேர்ந்த இவர் தற்போது காஷ்மீர் பிரிக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசின் முடிவை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கக் கூடாது. அரசின் இந்த நடவடிக்கையால் எதிர்பாராத பல மாற்றங்களும், வளர்ச்சிகளும் விரைவாக நடக்கும். ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கும். யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டதால் நெருக்கடி நிலையில் இருந்து லடாக் மீள உள்ளது வரவேற்கதக்கது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே அரசியல் அதிகாரம் நியாயமான முறையில் பிரிக்கப்படும்.

 

விரைவிலேயே காஷ்மீர் மீண்டும் முழு மாநில அந்தஸ்தை பெறும். அது வரை நாட்டின் பிற மாநிலங்களில் இருக்கும் மக்களை போல் காஷ்மீர் மக்களும் அரசியல் உரிமைகளை பெறட்டும். பலர் இதனை மனிதாபிமானமற்றது என கருதுகிறார்கள். ஆனால் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த இது தொடர்வது முக்கியம். மாநிலத்தின் இரண்டு முக்கிய கட்சிகளும் இதனை எதிர்ப்பது சரியல்ல என்றார்.

காஷ்மீர் மக்கள் அனைத்து வகையிலும் நன்மைகளையும் பெற வேண்டும் என்பதே எனது ஆழ்மனதின் ஒரே கவலை என தனது தந்தை எழுதிய வரிகளையும் கரன் சிங் நினைவு கூர்ந்தார்.


Share this page