Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

 

காஷ்மீர் விவகாரம் குறித்து சீன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னை. ஆனால் லடாக்கை, காஷ்மீரிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சுமூகமாக உள்ள நிலையில் இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக, இந்தியாவின் நடவடிக்கை உள்ளது.

 

காஷ்மீர் குறித்த தன்னிச்சையான நடவடிக்கையை இந்தியா தவிர்க்க வேண்டும். சீன நிலப்பகுதியை தங்களது நிர்வாகப் பகுதியாக இந்தியா காட்டி வருவதை, சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது. எல்லை பிரச்னையில் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு:
சீனாவின் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: காஷ்மீர் மசோதாக்கள், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது; அதுபோல மற்ற நாடுகளும் செயல்படும் என நம்புகிறோம். இவ்வாறு எதிர்ப்பினை இந்தியா தெரிவித்துள்ளது.


Share this page