ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் 370 மற்றும் 35-ஏ ஆகிய பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டதையடுத்து காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து கவர்னர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் கே.விஜயகுமார், கே.கே. ஷர்மா, கே.ஸ்கந்தன், பரூக் கான் ,மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாநில சட்டம்,ஒழுங்கு நிலவரம் மாநில மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் விநியோகம் , பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் தடையின்றி வழங்குவது குறித்து ஆலோசனை நடந்தது.
