Select Page

City Union Bank



Share this page

காஷ்மீர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் தேசிய கட்சி(பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்ட மிட்டு உள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அமர்நாத்யாத்திரை சென்றவர்கள் அவசரமாக மாநிலத்தை விட்டுவெளியேற அரசு உத்தரவிட்ட வருகிறது. மேலும் அதிகளவிலான ராணுவ வீரர்கள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

மாகநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவைகளும் முடக்கி வைக்கப் பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லுாரிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் ஸ்ரீநகரில் பேரணி மற்றும் பொதுகூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் மத்திய அமைச்சரவை கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Omar Abdullah

@OmarAbdullah

I believe I’m being placed under house arrest from midnight tonight & the process has already started for other mainstream leaders. No way of knowing if this is true but if it is then I’ll see all of you on the other side of whatever is in store. Allah save us ??

9,805 people are talking about this

Share this page