Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு ஆக.,15ம் தேதி வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ‘ஏர்-இந்தியா’ அறிவித்துள்ளது.

 

 

காஷ்மீரில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பயங்கரவாதிகளிடம் அதிநவீன துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, காஷ்மீரில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்ரீகர்கள், அங்கு தங்கும் நாட்களை குறைத்து, உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்தது.

 

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், ஜம்மு, காஷ்மீர் செல்லும் அனைத்து விமானங்களுக்கும், சுதந்திர தினம் வரை (ஆக., 15) ரத்து செய்யப்படுவதாக ‘ஏர்-இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டண தொகையையும் முழுவதுமாக திருப்பி தரப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


Share this page