Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணை பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

 

 

நாட்டில், 5,200 பெரிய அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டுமானத்தில் உள்ளன. சட்டம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அணைகள் பாதுகாப்பு, தற்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. அணைகளை பாதுகாக்கவும், அவற்றின் உறுதித்தன்மையை கண்காணிக்கவும், அணைகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முயற்சித்துள்ளது.

 

 

 

மாநிலங்கள் எதிர்ப்பு:

இந்நிலையில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, பல மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே, குரல் ஓட்டெடுப்பு மூலம் இன்று (ஆக.,2) நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா, நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு, உறுதித்தன்மை கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கான, தேசிய, அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வகை செய்யும். மேலும், அணை உடைப்பு போன்ற பேரிடர்களை தடுக்க, அணை பாதுகாப்பு தேசிய கமிட்டி அமைக்கப்படும்.


Share this page