Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: திவால் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவிலும் நேற்று நிறைவேறியது.
கடந்த, 28ல், திவால் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், லோக்சபாவில், திவால் சட்டத்திருத்த மசோதாவை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், ”கடனை செலுத்த தவறிய நிறுவனங்களின் சொத்துகளை, ஏலம் விடுவதன் வாயிலாக, கிடைக்கும் வருமானத்தை, கடன் வழங்கியவர்களிடம் அளிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

 

”திவால் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளுக்கு, 330 நாட்களுக்குள் தீர்வு காணவும், மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது,” என்றார்.மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, குரல் ஓட்டு மூலம் அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், மசோதா, சட்டமாக அமலாகும்.


Share this page