லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, காகித பயன்பாடு குறித்து நடைபெற்ற விவாதத்தில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: பார்லி.,யின் இரு அவைகளும் நடைபெறும் விவாதம், ஓட்டெடுப்பு போன்ற அனைத்துவிதமான செயல்பாடுகளும் காகிதத்தில் அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் காகித வடிவில் கோப்புகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு ஏற்படுகிறது. மேலும் இதனால் கோடிக்கணக்கில் மரங்களும் வெட்டப்படுகின்றன.

காகிதத்திற்கு பதிலாக லேப்டாப் பயன்படுத்துவதால், அரசுக்கு செலவு குறையும். இயற்கையை பாதுகாக்கும் முயற்சியாக இது இருக்கும். இதனை ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியாது. இதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. சிறிது கால அவகாசம் ஆனாலும், இம்முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.