Select Page

City Union Bank



Share this page

வாஷிங்டன்: ”இந்திய அரசுடன் அமெரிக்கா, மிகவும் கடினமாக செயலாற்றி வருகிறது,” என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், மைக் போம்பியோ கூறினார்.

 

 

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, சமீப காலமாக, வர்த்தக போர் நடந்து வருகிறது என்றே சொல்லலாம். இந்திய பொருளாதாரத்தில், அமெரிக்க பொருட்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்தியா அதிக வரி விதிக்கிறது. இதனால் கோபம் கொண்டுள்ள, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வெளிப்படையாகவே, இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். எனினும், இந்தியா அதை கண்டுகொள்ளவில்லை. அதே நேரம், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செயலாற்றுகிறது.

அமெரிக்காவில், அபரிமிதமாக உற்பத்தியாகும் பால் பொருட்களுக்கான சந்தையை, இந்தியாவில் விரிவுபடுத்த, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், அமெரிக்கா மேற்கொள்கிறது. அதற்காக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும், தகவல் தொழில்நுட்ப மென்பொருட்கள் மீதான சுங்க வரியையும் குறைத்தது.எனினும், இந்திய அரசு, அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களான பால் பொருட்கள், ஆடம்பர இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் மீது விதித்த வரிகளை குறைக்கவில்லை. இது, அமெரிக்காவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட, அமெரிக்க வர்த்தக துறை அதிகாரிகள், இந்தியா வந்து, இது குறித்து பேசினர்; எனினும், முன்னேற்றம் ஏற்படவில்லை.

 

இதை மறைமுகமாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், மைக் போம்பியோ, நேற்று குறிப்பிட்டார். இந்தோ – பசிபிக் நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், உடன் பயணிக்கும் நிருபர்களிடம் நேற்று பேசும் போது, ”இந்தியா தன் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள, அமெரிக்கா ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. எனினும், இந்தியாவுடன் அமெரிக்கா, கடினமாகவே செயலாற்ற வேண்டி உள்ளது,” என்றார்.


Share this page