Select Page

City Union Bank



Share this page

சண்டிகர் : பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர், அம்ரீந்தர் சிங் மீதான அதிருப்தியால், மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரர், சித்து, 55, டில்லி மாநில, காங்., தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

‘சிக்சர்’ சித்து என, கிரிக்கெட் ஆர்வலர்களால் போற்றப்படும் சித்து, துவக்கத்தில், பா.ஜ.,வில் இருந்தார். அதன் பின், காங்கிரசில் இணைந்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில், அமைச்சராக இருந்தார். முதல்வர், அம்ரீந்தர் சிங்குடன் ஏற்பட்ட அதிருப்தியால், கடந்த மாதம், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

டில்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த, முன்னாள் முதல்வர், ஷீலா தீட்ஷித், ௮௧, திடீர் மறைவை அடுத்து, டில்லி காங்கிரசில், ‘பெருந்தலைகள்’ யாரும் இல்லை. அந்த வெற்றிடத்தை, சித்து வாயிலாக நிரப்ப, காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது.

 

அடுத்த ஆண்டு துவக்கத்தில், இந்த மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சித்து தான், ஆளும், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.,வுக்கு மாற்றாக இருப்பார் என, காங்., மேலிடம் கருதுகிறது. எனவே, விரைவில் சித்து, டில்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என, காங்., மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை அப்படியே விட்டால், பஞ்சாபில் காங்கிரசை இல்லாமல் ஆக்கி விடுவார்.

 

அதே நேரத்தில், டில்லியில், காங்.,கிற்கு பிரபலமான நபர், தலைமை பொறுப்பு வகிக்கவில்லை என்றால், அந்த மாநிலத்தில் கட்சி, காலாவதியாகி விடும் என, அக்கட்சி மேலிடம் கருதியே, சித்துவை, டில்லிக்கு, ‘டிரான்ஸ்பர்’ செய்ய முடிவு செய்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Share this page