Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு(83), வரும் 8ம் தேதி(ஆக.,8) , நாட்டின் மிக உயரிய விருதான, ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.

 

 

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக சேவகரும், முன்னாள் எம்.பி.,யுமான, மறைந்த, நானாஜி தேஷ்முக், இசைக்கலைஞரும், கவிஞருமான, மறைந்த, பூபேன் ஹசாரிகா ஆகியோருக்கு கடந்த குடியரசு தினத்தன்று(ஜன.,26) ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், வரும் 8ம் தேதி(8-8-19) பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில், பிரணாப்புக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதினை வழங்க உள்ளார்.

 

பிரணாப் முகர்ஜி, நிதி, ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த, 2012 – 2017 வரை, நாட்டின் 13வது ஜனாதிபதியாக இருந்தார். மேலும் திட்ட கமிஷன் தலைவராக பொறுப்பு வகித்தவர். பிரணாப்புக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்ட போது, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this page