புதுடில்லி : பா.ஜ., எம்.பிக்கள் அனைவருக்கும் புதுடில்லியில், வரும் ஆகஸ்டு 3 மற்றும் 4 தேதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் பங்கேற்கின்றனர்.

ஆக., 3 -4 பயிற்சி வகுப்பு
நடப்பு லோக்சபா கூட்டத்தொடர் வரும் ஆகஸ்டு 4 வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி பா.ஜ.,வின் அனைத்து எம்.பி.,க்களும் கூட்டத்தொடரில் பங்கேற்று வருகின்றனர்.இந்த கூட்டத்தொடரின் கடைசி 2 தினங்களில், பா.ஜ., எம்.பி.,க்களுக்கு பயற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி அம்சங்கள்
கூட்டத்தொடர் முடிந்த பின்னர் மக்கள் மத்தியில் சென்று ஆற்றவேண்டிய பணிகள், தொகுதி வளர்ச்சி பணிகள், அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லுதல் போன்ற அம்சங்கள் இடம்பெறக்கூடும் என்று மூத்த பா.ஜ., தலைவர்கள் கூறியுள்ளனர்.