Select Page

City Union Bank



Share this page

ஹூஸ்டன்: பிரதமர் மோடி, தன் அமெரிக்க பயணத்தின்போது, செப்., 22ல், ஹூஸ்டன் நகரில், இந்தியர்கள் மத்தியில் பேசுகிறார். ‘ஹவ்டி மோடி’ என, பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம், செப்டம்பர், 20 முதல், 23ம் தேதி வரை நடக்கிறது; அதில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இந்தப் பயணத்தின் போது, ஹூஸ்டனில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், செப்., 22ல் மோடி பேசுகிறார்.
ஹூஸ்டனைச் சேர்ந்த, ‘டெக்சாஸ் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பு, இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு, ‘ஹவ்டி மோடி’ என பெயரிடப்பட்டுள்ளது.’ஹவ்டி’ என்பது, ‘ஹவ் டூ யு டூ’ என்பதன் சுருக்கம். அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில், நண்பர்கள் சந்தித்து கொள்ளும்போது, நலம் விசாரிக்க, ‘ஹவ்டி’ எனக் கூறுவதுவழக்கம். இந்நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்பர் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

இது பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘மாநாட்டின், வரவேற்பு குழுக்களில் பங்கேற்க, 650க்கும் அதிகமான சமூக அமைப்புகள், சம்மதித்து கையெழுத்திட்டுள்ளன. மாநாட்டில் யாரும் பங்கேற்கலாம். இதற்கான, ‘ஆன்லைன்’ முன்பதிவு, ஆகஸ்ட், 12ம் தேதி துவங்குகிறது’ என்றனர்.


Share this page