புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்கிறது மத்திய அரசு என காங். கட்சியின் ராகுல் கூறினார்.
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு பார்லி.யின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. புதிய திருத்த சட்டத்தில் தகவல் ஆணையரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக காங். கட்சியின் லோக்சபா எம்.பி. ராகுல் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளதாவது, அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள விரும்பும் மக்களிடம் உண்மையை மறைக்க பா.ஜ., முயற்சிக்கிறது. யாரும் தங்களை கேள்வி கேட்கக்கூடாது என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இந்த சட்டத் திருத்தத்தை அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் ஊழலை ஒழிப்பதாக கூறும் பா.ஜ.. அரசு, ஊழல்வாதிகளுக்கு எதிரான தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்கிறது. இவ்வாறு அவர் பதிவேற்றியுள்ளார்.