புதுடில்லி: அடுத்த கட்டமாக, 20 முதல், 25 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக, இந்திய விமானநிலைய ஆணையத்தின் தலைவர், குருபிரசாத் மஹாபத்ரா கூறியுள்ளார்.
லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், தனியார் மய நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதில், ஐந்து விமான நிலையங்களுக்கான ஒப்பந்தத்தை, அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 10 லட்சம் முதல், 15 லட்சம் பயணியரை கையாளும், பெரிய விமான நிலையங்களும், அடுத்த கட்டமாக தனியார் மயமாக்கப்பட உள்ளன.