சண்டிகர்: பாக்., ராணுவ அதிகாரியை கார்கில் போரில் சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் சத்பால் சிங்கிற்கு உயர் பதவி வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

கார்கில் போரின் போது பாக். ராணுவத்தை வழிநடத்திய கேப்டன் உள்ளிட்ட நான்கு பேரை சுட்டுக் கொன்ற இந்திய ராணுவ வீரர் சத்பால் சிங் (பஞ்சாப்), தற்போது பவானிகர் என்ற ஊரில் டிராபிக் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கார்கில் வெற்றி தினமான நேற்று, சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
சத்பால்சிங்கின் தீர செயல்
1999ம் ஆண்டு ஜூலை மாதம் பாக். ராணுவம் டைகர் ஹில் பகுதியை பிடித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 8 சீக்கிய வீரர்கள் அடங்கிய குழுவில் சத்பால் சிங் இடம் பெற்றிருந்தார். மோதலின் போது, பாக். ராணுவத்திற்கு தலைமை தாங்கியிருந்தவர் கேப்டன் கர்னார் ஷெர் கான் உள்ளிட்ட 4 பாக்., வீரர்களை, சத்பால்சிங் தன்னிடமிருந்த இயந்திர துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதனால் மற்ற பாக்., ராணுவத்தினர் நிலை தடுமாறினர். சாதாரண சிப்பாயாக அப்போது இருந்த அவரது இந்த செயல், கார்கில் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

வீர்சக்ரா மட்டுமே
பாக். அரசு போரில் உயிரிழந்த கர்னார் ஷெருக்கு, அந்நாட்டின் உயரிய ‛நிஷான் இ ஹைதர்’ விருதினை வழங்கி கவுரவித்தது. ஆனால், இந்தியாவின் வெற்றிக்கு உதவிய சத்பால்சிங்கிற்கு வீர்சக்ரா விருது மட்டும் வழங்கப்பட்டது. ‛பரம்வீர்சக்ரா’ விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் அவருக்கு இந்த விருது வழங்கப்படவில்லை.
இந்நிலையில் 2009ம் ஆண்டு ராணுவத்திலிருந்து விலகிய சத்பால்சிங், ராணுவ வீரர்கள் கோட்டாவில் பஞ்சாப் போலீசில் இணைந்தார். தற்போது வரை ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.

வைரலானது
கார்கில் வெற்றி தினமான நேற்று சத்பால்சிங்கின் தற்போதைய நிலை குறித்து மீடியாக்களில் செய்தி வைரலாகியது. சமூக வலைதளங்களில், கார்கில் வெற்றிக்கு காரணமான வீரரை இப்படியா நடத்துவது, என்று பஞ்சாப் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பப்பட்டது.
பதவி உயர்வு
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங், சத்பால் சிங்குக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார். மேலும், சத்பால்சிங் இந்த பதவிக்கு தகுதியானவர், அப்போதைய அகாலிதள அரசு அவருக்கு தகுந்த பதவி வழங்கி கவுரவிக்க தவறி விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Have promoted Vir Chakra awardee Satpal Singh of the #KargilWar from senior constable to ASI. He deserves special treatment, which previous @Akali_Dal_ govt didn’t deem fit to give him at the time of his recruitment in 2010. This is the least we can do for our brave soldiers. https://twitter.com/manaman_chhina/status/1154576954617552896 …
Man Aman Singh Chhina@manaman_chhinaTiger Hill Vir Chakra recipient who killed Pak Capt Karnal Sher Khan now directs traffic in a small Punjab town. The story of Havildar (now Head Constable) Satpal Singh of 8 Sikh, reported by me.https://indianexpress.com/article/india/tiger-hill-vir-chakra-now-directs-traffic-in-a-small-punjab-town-5852792/ …