Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: பணியிடங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து ஆராயவுள்ள அமைச்சர்கள் குழுவுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை ஏற்பார் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷீலா ஹரித் கேத்தான் கூறியுள்ளார்.

 

 

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்வதற்காக, 4 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு கடந்த ஜூலை 18ம் தேதி அமைக்கப்பட்டது.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்த புதிய குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைவராக பதவி வகிப்பார் என அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷீலா ஹரித் கேதான் தற்போது தெரிவித்துள்ளார்.இணையத்தில் மீடூ இயக்கம் பிரபலமடைந்ததை அடுத்து பாலியல் குற்றங்கள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழு முறையாக இயங்கவில்லை என சமூக செயற்பாட்டாளார்கள் விமர்சித்து வந்த சூழலில் தற்போது இந்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.


Share this page