புதுடில்லி: அஞ்சல் துறை தேர்வை பிராந்திய மொழிகளில் நடத்துவது குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஞ்சல் துறை சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி ராஜ்யசபாவில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நடத்தி முடிக்கபட்ட அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் தொடர்ந்து மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.

இந்நிலையில் மாநில மொழிகளில் நடத்துவது குறித்து அனைத்து அஞ்சலக தலைமை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.