புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் வணிக ரீதியாக செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் இஸ்ரோ 6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜிதேந்திரசிங் பார்லியில் கூறியதாவது: இஸ்ரோவின் துணை அமைப்பான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் செயற்கை கோள்களை வணிக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 239 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரோவின் வருவாய் சுமார் 6 ஆயிரத்து 289.05 கோடி ரூபாயாக உள்ளது.

நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்(என்.எஸ்.ஐ.எல் ) என்பது இந்திய விண்வெளி திட்டத்தில் அதிகரித்து வரும் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கும், உலகளாவிய விண்வெளி சந்தையை வணிக ரீதியாக முறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது என கூறினார்.