Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், ‘போக்சோ’ என, அழைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகபடுத்துவதற்காக இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: நமது குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில், சட்ட திருத்தத்தை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.

 

மேலும் சிறார்களை வைத்து ஆபாசபடங்கள் தொடர்பான குற்றங்களை தடுக்கும் வகையில், அந்த வகையான குற்றங்களை செய்பவர்களுக்கும், சிறார் ஆபாச படங்களை வைத்திருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.


Share this page