Select Page

City Union Bank



Share this page

KOLKATA: 

ஹைலைட்ஸ்

  1. திரிணாமூல் காங்கிரஸ் பேரணியில் தன் வலிமையை நிரூபிக்கும்
  2. மம்தா பானர்ஜி தன் கட்சியின் ஆதரவாளர்களை முன்னிலைப்படுத்துவார்
  3. பாஜக இந்த பேரணியை சர்க்கஸ் என்று குறிப்பிட்டது

2021 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை இன்று நடைபெறவிருக்கும் தியாகிகள் பேரணியுடன் தொடங்கும் எனத் தெரிகிறது. திரிணாமூல் காங்கிரஸின் வலிமையை வெளிக்காட்டும் பேரணியாகவும் இது இருக்கும் எனத் தெரிகிறது.

1993இல் மம்தா பானர்ஜியின் பேரணியி போலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் தியாகத்தை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. கொல்கத்தாவில் கட்சி ஆதரவாளர்களை உரையாற்றவுள்ளார். மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்.

இருப்பினும் தேசிய தேர்தலில் 18 இடங்களைப் பிடித்த பாஜக இந்த பேரணியை ‘சர்க்கஸ்’என்றே குறிப்பிடுகிறது.

ஜூன் மாதம் பிற்பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக புகார் அளித்தவர்களின் கமிஷன் குறைக்கப்பட்டது.

அந்தப்பணத்தை திரிணாமூல் தலைவர்கள் திருப்பித்தர வேண்டும் இல்லையென்றால் அவர்களை பேரணியிலிருந்து வெளியேற விடமாட்டோமென்று பாஜக தலைவர் திலீப் கோஸ் தெரிவித்தார்.

திலீப் கோஸ் கருத்து ‘வன்முறையை தூண்டக்கூடிய’ ஒன்று.  அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. திலீப் கோஸ் கைது செய்யப்படவேண்டும் என்று ஃபிர்ஹாத் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.

COMMENT

வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் இயங்கும் 30 சதவீத ரயில்களை மட்டுமே இயக்குவதன் மூலம் பேரணியை பாஜக தோல்வியடையச் செய்ய முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் உத்தரவின் பேரில் நாளை வழக்கமான ரயில்கள் இயங்காது என்று கேள்விபட்டேன். வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் இயங்கும் 30 சதவீத ரயில்களை மட்டுமே அவர்கள் இயக்குவார்கள் என்று தகவல் என்னிடம் உள்ளது இது சரியல்ல என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


Share this page