புதுடெல்லி:
நாட்டின் சில மாநிலங்களில் பதவி வகிக்கும் கவர்னர்களை இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அவ்வகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் கவர்னராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தின் புதிய கவர்னராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தின் கவர்னர் லால் ஜி தான்டன் மத்திய பிரதேசம் மாநிலத்தின் கவர்னராக மாற்றன் செய்யப்பட்டுள்ளார். பீகாரின் புதிய கவர்னராக பாகு சவுஹான், நாகலாந்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி, திரிபுரா மாநிலத்தில் புதிய கவர்னராக ரமேஷ் பய்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.