Select Page

City Union Bank



Share this page

சென்னை: மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை. தமிழை வளர்க்கவே பாடுபடுகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை கிண்டியில் நடந்து வரும் நகரத்தார் மாநாட்டின் ஒரு அங்கமாக நடந்த பொருளாதார கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் கூறுகையில், தஞ்சாவூர் கோயில் போல் தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரம்மாண்டமாக இருக்கிறது. அதனுடைய சிற்பக்கலைகள் பாராட்டத்தக்கது.

தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும். கல்வி தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள்.


சூட்கேஸ் தூக்காதது ஏன்?

சூட்கேஸ்கள் ஆங்கிலேர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் பட்ஜெட் சாதாரணமாக துணியால் சுற்றப்பட்டு, எடுத்துச் சென்று தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றார்.

 

இந்திய திணிப்பில்லை :


கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்தி திணிப்பு என கூறுவதை ஏற்க முடியாது. தமிழை வளர்க்க நாங்களும் முயற்சி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறுவது சரியல்ல. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Share this page