ஹூஸ்டன்: செப்டம்பரில் அமெரிக்கா வரும், பிரதமர் மோடியை, ஹூஸ்டன் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்; அங்குள்ள, இந்தியர்கள் மத்தியில், அவர் உரையாற்ற உள்ளார்.

வரும் செப்டம்பர், 20 – 23ம் தேதிகளில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் நடக்க உள்ளது. அதில் பங்கேற்க வரும், பிரதமர் மோடி, 22ம் தேதி, ஹூஸ்டன் நகரில், இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வெளியிடப்படவில்லை. எனினும், ஹூஸ்டன் நகரில் உள்ள இந்தியர்களுக்கு கிடைத்த தகவல்படி, 22ம் தேதி, மோடி பேச உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த, 2014ல், பிரதமராக பொறுப்பேற்ற மோடி, இதுவரை, அமெரிக்காவில் இரண்டு, அமெரிக்க – இந்தியர் கூட்டங்களில் பேசியுள்ளார். அவை, கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலி மற்றும் நியூயார்க் நகரம். ஹூஸ்டன் நகரில் அவர், 22ம் தேதி உரையாற்றினால், அது, மூன்றாவது உரையாக இருக்கும்; இரண்டாவது முறையாக, பிரதமராக பொறுப்பேற்ற பின், அவரின் முதல் உரையாக இருக்கும்.