Select Page

City Union Bank



Share this page

சண்டிகர்: பரோல் கேட்டு விண்ணப்பித்த பலாத்கார சாமியாருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பரோல் மனுவை வாபஸ் பெற்றார்.
ஹரியானாவில், சிர்சா நகரில், ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைமையகம் உள்ளது. இதன் தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங்,.51 இரண்டு பெண் துறவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2017-ம் ஆண்டு , 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ஹரியானா மாநிலம் ரோத்தாக் நகரில் உள்ள சோனாரியா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

 

தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள், கலவரத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், டில்லி மாநிலங்களில் நடந்த வன்முறையில், 35 பேர் உயிரிழந்தனர்.போலீஸ் வாகனங்கள் உட்பட, பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலம் தரிசாக இருப்பதால் விவசாயம் செய்ய வேண்டும் எனவே தனக்கு பரோல் வழங்குமாறு கடந்த சில வாரங்களுக்கு முன் விண்ணப்பித்தார். சிறையில் இவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டு 42 நாட்கள் பரோல் வழங்கியது சிர்சா மாவட்டம் நிர்வாகம் பரோல் வழங்கியது.சாமியாருக்கு பரோல் வழங்கியதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பின.முன்னதாக சாமியார் பெயரில் எந்த விவசாயம் நிலங்களும் இல்லை என்பதும் தவறான தகவல் கொடுத்து பரோல் கேட்டு விண்ணப்பித்ததாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாமியார் ராம் ரஹீம் தனது பரோல் மனுவை வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this page