புதுடில்லி : பா.ஜ., பார்லிமென்ட் குழுவின் முதல் கூட்டம், டில்லியில் நாளை, பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கிறது.

மத்தியில், பிரதமர் மோடி தலைமையில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பா.ஜ., – எம்.பி.,க்களின் கூட்டம், நாளை நடக்க உள்ளது. கடந்த, ௨௫ம் தேதி, இக்கூட்டம் நடக்கவிருந்தது. ராஜஸ்தான் மாநில, பா.ஜ., தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, மதன்லால் சைனி, மறைவை அடுத்து, அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில், அந்த கூட்டம், நாளை, பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கவுள்ளது.

இதில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், பா.ஜ., எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து, எம்.பி.,க்களுக்கு, பிரதமர் மோடி அறிவுரை வழங்க உள்ளார்.