Select Page

City Union Bank



Share this page

திரிணமுல் எம்.பி., நஷ்ரத் ஆவேசம்

கோல்கட்டா:’நான் ஒட்டு மொத்த இந்தியாவுக் கும் சொந்தம். நெற்றியில் குங்குமம் வைத்ததற்காக, குறிப்பிட்ட வட்டத்துக்குள், என்னை சுருக்க வேண்டாம்’ என, திரிணமுல், எம்.பி., யும், பெங்காலி நடிகையுமான, நஷ்ரத் ஜகான் கூறியுள்ளார்.

நெற்றியில் ,குங்குமம் ,வைத்தது,தப்பா?,திரிணமுல் எம்.பி., நஷ்ரத் ஆவேசம்

பெங்காலி மொழி திரைப்படங்களில், பிரபலமான நடிகை, நஷ்ரத் ஜகான், 29. விமர்சனம்சமீபத்தில் நடந்த லோக்சபா

தேர்தலில், மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பார்லி மென்டில், எம்.பி.,யாக பதவியேற்றபோது, நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார். கைகளில்வளையல்கள் அணிந்திருந்தார்.

‘முஸ்லிம் மதத்தை சேர்ந்த, நஷ்ரத் ஜகான், எப்படி குங்குமம் வைக்கலாம்?’ என, கடும் விமர்சனம் எழுந்தது. நஷ்ரத்துக்கு எதிராக, மத அறிஞர்கள், ‘பாத்வா’ எனப்படும், தடை உத்தரவும் பிறப்பித்த தாக, செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து, சமூக வலைதளத்தில், நஷ்ரத் ஜகான்விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:யார் என்ன கூறினாலும், நான் முஸ்லிம் தான்; அதில், எந்த மாற்று கருத்தும் இல்லை.

உடை அணிய வேண்டும், எப்படி, ‘மேக் அப்’ செய்ய வேண்டும் என கூறுவதற்கு, யாருக்கும் உரிமை இல்லை; அது, என் விருப்பம். நம்பிக்கை என்பது, மதம், ஜாதிகளுக்கு அப்பாற் பட்டது. நான், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சொந்தம். குறிப்பிட்ட வரையறைக்குள், என்னை சுருக்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Share this page